Slide 1
Slide 2
Slide 3
previous arrow
next arrow
Marquee with Tamil Titles & Icons

முழுக்காதன் குலம் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தில் சிறப்புடையது. குழந்தைகளுக்கு விமரிசையாக காது குத்துவதால் இந்தப் பெயர் வந்தது.

இந்தக் குலத்தின் குலதெய்வம் வெள்ளையம்மாள், காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி பெற்றுள்ளார்.

வெள்ளையம்மாளின் தந்தை காணி நிலம் வழங்க கூறியபோது, அண்ணன்மார்கள் மறுத்தனர். அவள்மீது அவதூறு கூறி வீட்டை விட்டு துரத்தினர்.

சத்தியம் செய்ய மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன:

  1. உலர்ந்த நுகத்தடி துளிர்க்க வேண்டும்.
  2. மண் குதிரை தலையசைத்து கனைக்க வேண்டும்.
  3. சுடாத மண்குடத்தில் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

வெள்ளையம்மாள் அனைத்தையும் நிறைவேற்ற, அண்ணன்மார்கள் வீடு விட்டு சென்றனர். பின்னர், அவள் தெய்வமாகி வழிபாட்டுப் பெற்றாள்.